×

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் கூறினார். வருகிற 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கூட்டம் கூடுவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. 235 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 35 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதனால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா அதிகரிப்பால் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் 12-ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்துமாறும் வலியுறுத்தினார். …

The post சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanchipuram ,Thiruvallur ,Erode ,Govai ,Health Secretary ,Radhakrishnan ,Goai districts ,
× RELATED சென்னை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு